திருவாரூர் மாவட்டத்தில் மல்லிகை, முல்லை மற்றும் பூக்கள் விலை குறைந்தும் வியாபாரம் சரிவர இல்லாததால் பூவியாபாரிகள் மிகுந்த வேதனை..
திருவாரூர் மாவட்டத்தில் மல்லிகை, முல்லை மற்றும் பூக்கள் விலை குறைந்தும் வியாபாரம் சரிவர இல்லாததால் பூவியாபாரிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சராசரியாக 10 டன் மல்லிகை. முல்லை. ரோஜா. சம்பங்கி. உள்ளிட்ட பூக்கள் சராசரியாக விற்பனை நடைபெறும். மேலும் விசேஷ காலங்களான தமிழர்கள்பண்டிகை, ஆயுதபூஜை, முகூர்த்தநாட்களில் 20டன்வரை பூக்கள் விற்பனையாகும். மேலும் சராசரியாக மல்லி ரூபாய் 600க்கும் முல்லை ரூபாய் 500க்கும் ரோஜா 200க்கும் விற்பனை ஆகிவந்த நிலையில் விசேஷ காலங்களில் ஆயிரகணக்கில் விற்பனையாகும் ஆனால் தற்போது கடும்வெயில் காரணமாக பூக்களின்வரத்து குறைந்தநிலையிலும் சரிவர வியாபாரம் இல்லாததால் மல்லி ரூபாய் 300க்கும், முல்லை ரூபாய் 250க்கும், ரோஜா ரூபாய் 100க்கும் விலை குறைந்து விற்பனையாகிறது. இந்த விலைகுறைந்த நிலையிலும் வியாபாரம் ஆகாததால் பூவியாபாரிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் மேலும் திருவாரூர் மாவட்டத்திற்கு மல்லிகை திருச்சியில் இருந்தும், முல்லை வேதாரண்யத்தில் இருந்தும், ரோஜா ஓசூரில் இருந்தும், சம்பங்கி பெரம்பலூரில் இருந்தும். பூக்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில் அந்தந்த பகுதியில் கடும் வெயில் காரணமாகவும் நீர்பாசன வசதி இன்மை காரணமாகவும் பூக்கள் வரத்து குறைந்துள்ள நிலையிலும் வியாபாரம் இல்லாததால் பூக்கள் விலை கடும்வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவும் இதன்காரணமாக இந்தவியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பூ வியாபாரிகள். மாலைகட்டும் தொழிலாளர்கள். வீட்டில் இருந்தபடியே பூக்கள்கட்டி விற்பனைசெய்யும் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கும் இந்த தொழிலில் வருமானம் தற்போது இல்லாததால் வியாபாரிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர் .














