தென்கிழக்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. மேற்கு வட மேற்கு திசைகளின் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் 9 ஆம் தேதி முதல் கடலோர டெல்டா மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை படி மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். சில நேரங்களில் 65 கி.மீ. வேகத்தில் திடீர் காற்று வீசக்கூடும் கடல் கொந்தளிப்புடனும், மிகக் கொந்தளிப்புடனும் காணப்படுவதுடன், 9, 10 ஆகிய தேதிகளில் 2.8 முதல் 3.4 மீட்டர் வரை உயரத்திற்கு கடல் அலைகள் எழும். விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் 9ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்த கடிதம் மாவட்டத்தில் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அறிவிப்பு தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் பாடல்கள் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் முகத்துவாரத்தை ஒட்டிய ஆறுகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை அறிவுறுத்தல்
-
By Satheesa

- Categories: News
- Tags: district newsfishermenmayiladuthuraitamilnadu
Related Content
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை
By
Satheesa
April 29, 2026
கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME
By
Satheesa
April 29, 2026
திருவாரூரில் மே 5-ம் தேதி நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி
By
Satheesa
April 29, 2026
திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா
By
Satheesa
April 29, 2026