கன்னியாகுமரி kumari St. Xavier Church குமரி மாவட் த்தில் கேட்ட வரம் தரும் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா – திருக்கொடியேற்றம் கண்ணைக் கவரும் வானவேடிக்கையுடன் நடைபெற்ற கொடியேற்றத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான நாகர்கோவில் கோட்டாறு கேட்டவரம் தரும் புனித சவேரியார் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா இன்று மாலை திருக்கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இதையொட்டி நடைபெற்ற விழாவில் கோட்டாறு மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர் டி. ஜான்ரூபஸ் திருக்கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடைபெற்றது.
சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து வழிபடும் இப்பேராலயம், கேட்ட வரம் தரும் கோட்டாறு சவேரியார் என பக்தர்களால் போற்றப்படுகிறது.
ஆண்டுதோறும்
நவம்பர் 24 முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சிறப்பு திருப்பலிகள், நவநாள் வழிபாடுகள் நடைபெற உள்ளன.
டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் இரவு தேர்ப்பவனியும் நடைபெற உள்ளது, ஒன்பதாம் நாள் நடைபெறும் திருவிழாவில் தேருக்கு பின்னால் பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்யும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது டிசம்பர் 3-ம் தேதி பெருவிழா திருப்பலி மற்றும் தேர்ப்பவனியும் நடைபெற உள்ளன. 10-ம் நாள் திருவிழாவான டிசம்பர் 3-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது
திருவிழாவில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் குடிநீர் கழிவறை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பலத்த போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது







