வேதாரண்யம் கோட்டாட்சியர் அளவிலான இந்த மாதம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாததால் விவசாயிகள் வேதனை குறுவை சாகுபடியும் பொய்த்துப் போன நிலையில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருவுவதால் விவசாயிகள் கண்ணீர்*விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வேதாரண்யம் வட்டாட்சியர் பங்கேற்பதில்லை எனவும் விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்;
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை எனவும் இந்த மாதம் 20 தேதி யான நிலையிலும் விவசாயிகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படவில்லை எனவும் குறுவை சாகுபடி அறவே இல்லாத நிலையில் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து முறையாக தண்ணீர் வராததால் கடைமடை பகுதியான வேதாரண்யம் தலைஞாயிறு திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகள் வரண்டு காணப்படுகின்றது இந்த நிலையில் ஆறுகளில் வெங்காயத் தாமரை படர்ந்து கிடப்பதாலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வராததால் 50 நாட்கள் ஆன நெற்பயிர்கள் கருகும் நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் இன்றளவும் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடத்தப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை உடனடியாக நடத்தி விவசாயிகளின் குறைகளை கேட்டு அறிய வேண்டும்மேலும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் வேதாரண்யம் வட்டாட்சியர் திருக்குவளை வட்டாட்சியர்கள் பங்கேற்க வேண்டும் என தமிழக கடைமடை விவசாய சங்க மாநில தலைவர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பேட்டி :-கமல்ராம் தமிழக கடைமடை விவசாய மாநில தலைவர் வேதாரண்யம்.







