குறுவை சாகுபடியில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய, 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிட்டும், 33 இடங்களில் மட்டுமே செயல்படும் கொள்முதல் நிலையங்கள், முட்டையுடன் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் காத்துக் கிடக்கும் விவசாயிகள் அவலம் :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பட்டத்தில் 98 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. நிலத்தடி நீர் மற்றும் மழையை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்ட நிலையில், தற்பொழுது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்பட்ட குருவை சாகுபடி செய்த விவசாயிகளுக்காக 100 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் நிர்வாக காரணங்களால் 33 இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன, கடந்த ஆண்டு 140 நெல் கொள்முதல் நிலையங்கள் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொட்டி காத்து கிடக்கின்றனர். சீர்காழி தாலுகா பழையபாளையம், மாதானம், அரசிளமங்கலம், மத்தளம் உடையான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு செயல்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகளை, மேல் கொள்முதல் நீங்கள் செயல்படாது வேறு இடங்களுக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்று நுகர்வுகள் வாணிப கழகம் தெரிவித்ததால், செய்வது அறியாத திகைத்துள்ள விவசாயிகள், தாங்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்க முடியாத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் அவரை நேரிலும் சந்திக்க முடியாத சூழலில் வாசலிலேயே காத்துக் கிடக்கின்றனர். கடும் வறட்சியில் பாடுபட்டு கொள்முதல் செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பேட்டி
1.சீனிவாசன் – விவசாய மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்
2.ரவி விவசாயி














