ரசிகர்களின் மனதில் இன்னும் அழியாத காதல் சின்னமாக இருந்து வரும் படம் 7ஜி ரெயின்போ காலனி. 2004-ல் வெளியாகி, தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய இப்படம் விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த காதல் காவியத்தை இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையோடு, சோனியா அகர்வால் – ரவி கிருஷ்ணா ஜோடியின் காதல் பயணம் இன்றும் ரசிகர்களின் நினைவில் நீங்காததாய் உள்ளது.
இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக நீண்ட காலமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், செல்வராகவன் கடந்த மாதங்களில் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவருகிறது என்று உறுதியாக அறிவித்தார்.
மாஸ் அப்டேட் வந்துவிட்டது!
7ஜி ரெயின்போ காலனி – 2 படம் தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்த காதல் கதையின் தொடர்ச்சியை திரையரங்கில் பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

















