மயிலாடுதுறையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
சட்டப்பேரவையில் டேய் தற்குறி என்றால் கூட காதில் வாங்காமல் பேசிக் கொண்டிருப்பார்கள் என்று அமைச்சர்களை ஒருமையில் விமர்சித்த பூம்புகார் எம்எல்ஏவால் பரபரப்பு:-
சட்டப்பேரவையில் திமுக தலைவர்களை விமர்சித்து பேசிய முதலமைச்சர் விஜயை கண்டித்து மயிலாடுதுறையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:-
அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுகவினரை கடுமையாக விமர்சித்து முதலமைச்சர் பேசியிருந்தார். மிசா சட்டம் குறித்தும் உடல் மொழியால் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலினை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயின் திமுகவுக்கு எதிரான பேச்சை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்ப அங்காடி முன்பு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று முதல்வர் விஜய்க்கு எதிராக கண்டனம் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பேசுகையில் சட்டமன்றத்தில் தலையைப் பற்றி கேட்டால் காலை பத்தி சொல்கிறான் என்று ஒருமையில் பேசி மூன்று லூசை வைத்துவிட்டு நாங்கள் மாரடிக்கிறது பெரிய பாடா இருக்கு தற்குறி பசங்க டேய் அப்படின்னா கூட காதுல வாங்க மாட்டான் அந்த மாதிரி கேசை உள்ள வச்சிருக்கோம், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ராஜ்மோகன் (ராஜ்குமார் என்று சொல்கிறார்) டேய் என்று கத்தினால் கூட காதில் வாங்காமல் பேசிக்கொண்டு இருப்பான் என்று ஒருமையில் கடுமையாக சாட்டினார். ஆளுங்கட்சி ஆக இருக்கும்போதே எதிர்க்கட்சி கேள்வி கேட்டால் அதற்கு சரியான கோணத்தில் பதில் சொல்லணும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

















