தென் அமெரிக்காவின் முக்கிய நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டேனியல் நோபா மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார்.
முந்தைய ஆட்சிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதியதொரு தேர்தல் நாடு முழுவதும் நடைபெற, அதில் டேனியல் நோபா 55.6% வாக்குகளை பெற்று உறுதியான வெற்றியைப் பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட லூயிஸுடன் ஒப்பிடும்போது, நோபா 16,468 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் இருந்தார். இந்த வெற்றி மூலம் டேனியல் மீண்டும் அதிபர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் ஈகுவடார் மக்கள் மீண்டும் அவரை நம்பிக்கையுடன் தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.