புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட கார் மற்றும் மதுபானங்கள் சீர்காழியில் பறிமுதல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்னாலகுடி பகுதியில் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் போலீசார் வாகனம் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனை ஈடுபட்டனர்,அப்போது புதுச்சேரி மாநிலத்திலிருந்து மது பாட்டில் கடத்தி வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து காரில் 32 அட்டைப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 2016 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர். காரைக்கால் பகுதியை சேர்ந்த ரகுராமன் என்பவர் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு காரில் வந்த ஒட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் காரில் கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் தாண்டவன் குளம் பகுதியில் விற்பனை செய்து கொண்டு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது, மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















