• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா

by Priscilla
December 29, 2025
in Cinema
0
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாரதிராஜா சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அதனை உறவினர்கள் மறுத்துள்ளனர்.

‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘கிழக்கு சீமையிலே’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் தனித்த அடையாளம் பெற்றவர் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ், கடந்த மார்ச் மாதம் காலமானது குறிப்பிடத்தக்கது. அந்த இழப்புக்குப் பிறகு பாரதிராஜா மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி பாரதிராஜாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரை உறவினர்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆரம்பத்தில் ஓய்வில் இருந்த அவருக்கு, பின்னர் வீசிங் உள்ளிட்ட சுவாச தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதற்காக மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

பாரதிராஜாவின் தற்போதைய உடல்நிலை குறித்து அவரது உறவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், “பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து பரவும் தகவல்கள் உண்மையல்ல. அவர் நலமுடன் இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் வீடு திரும்புவார்” என தெரிவித்துள்ளனர்.

Tags: BharathirajadirectorHEALTH ISSUEShospitaltamil cinemas
Previous Post

குடியரசுத் துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று புதுச்சேரி வருகை

Next Post

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !
Cinema

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

by Satheesa
November 13, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6