ஏவிசி கல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா இன்று கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உற்சாகமாக நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும், ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கடராமன் கலந்துகொண்டு தேசியக்கொடியையும் ஒலிம்பிக் சுடரையும் ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “நமது கல்லூரி மாணவர்கள் உலகளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகின்றனர். அவர்கள் வாழ்க்கையிலும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்” என வாழ்த்தினார்.
பின்னர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். நாகராஜன், துணை முதல்வர் எம். மதிவாணன், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநர்கள் எம். செந்தில் முருகன், ஏ. வளவன், முதல்வர்கள் பி. பாலசுப்ரமணியன், என். தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உடற்கல்வி இயக்குநர் டாக்டர் ஜே. ராஜ்குமார் ஆண்டறிக்கையை வாசித்தார். மேலும் முன்னாள் தேர்வு நெறியாளர் மேஜர் ஜி. ரவிசெல்வம், டீன் எஸ். மயில்வாகணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பொருளாதாரத் துறை பேராசிரியை டாக்டர் எஸ். செல்வி நன்றி தெரிவித்தார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
