மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-
மயிலாடுதுறை அருகே பேச்சாவடி பகுதியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து குழுவின் செயலாளர் அன்பு செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைமையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். முத்தாரத்து ஒப்பந்தத்தை மீறாமல் பாரபட்சம் இன்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தோஷங்களை எழுப்பினர்
