தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மனைவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் :-
தகவல் பெறும் உரிமை சட்டம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சினேக பிரியா, மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற பேரணி முக்கிய வீதிகள் வழியாக ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது

















