ஒத்திகை நிலத்தை விற்பனைக்கு தராததால் மற்ற சாதியினரை தூண்டிவிட்டு தொல்லை பம்ப்புசெட்டை இயக்கி மற்ற வயல்களுக்கு தண்ணீர் திருடும் அராஜகம்
தட்டிக் கேட்ட பெண்ணை அடித்து உதைத்து மானபங்கம்
மயிலாடுதுறை அருகே தத்தனூர் கிராமத்தில் அடைக்கலராஜின் தந்தை தமது 10 ஏக்கர் விவசாய நிலத்தை பட்டாவரம் அமுல்ராஜ்குமார் என்பவரிடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.40 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார், அடைக்கலராஜின் தந்தை இறந்துவிட்டதால் அவரது மகன் ரூ,2 லட்சம் கொடுத்து நிலத்தை மீட்டுள்ளார்.
அந்த நிலத்தில் வேலை ஆரம்பித்தபோது அமுல்ராஜ்குமார் ஒருசிலரை சேர்த்துக்கொண்டு சென்று தடுத்ததோடு ரூ-10 லட்சத்திற்கு நிலத்தை எனக்கே கொடுக்கவேண்டும் இல்லை என்றால் ஆதிதிராவிடரைவிட்டு தகராறு செய்து பிசிஆர் கேசில் சிக்க வைப்பேன் என்று மிரட்டியுள்ளார். நிலம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அமுல்ராஜ்குமார், ஆதிராவிட நண்பர்களை சாதிப் பெயரை சொல்லி திட்டிவிட்டார் என்று அடைக்கலராஜ் மற்றும் அவரது மனைவி பெயரில் சாதிய வன்கொடுமைக்கான புகாரை பெரம்பூர் காவல்நிலையத்தில் அளித்தார், விசாரணையில் அது பொய் என்றும் சிவில் பிரச்னைக்காக தூண்டிவிட்டப்பட்டது என்று வழக்காகவில்லை
இதனால் ஆத்திரமடைந்த அடைக்கலராஜ் பம்ப்செட்டை இயக்கி அருகில் உள்ளவர்களுக்காக தண்ணீர் திருடி விவசாயத்திற்கு விற்றுள்ளனர், இதைதட்டிக் கேட்ட அடைக்கலராஜ் மற்றும் அவரது மனைவி கீர்த்தனா ஆகியோரை 4 பேர் சென்று வீடு புகுந்து அடித்தும் நெஞ்சில் உதைத்தும் கீர்த்தனாவை மானபங்கப்படுத்தி கொச்சை வார்த்தைகளால் திட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்ய வைத்தபோது நடந்து சென்ற கீர்த்தனா மயங்கி விழுந்துள்ளார், அவரை மீண்டும்அவசர சிகிச்சைபிரிவில் சேர்த்துள்ளர், இந்த சம்பவத்தை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துளளார். .













