கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே கோதை ஆற்றில் ஒரு வருடத்திற்கு மேலாக மக்களை அச்சப்படுத்திய முதலை சிறப்பு குழுவினர் கட்டி இருந்த வலையில் சிக்கியது
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே கோதை ஆற்றில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருப்பதை அந்த பகுதியில் இருந்து சிலர் பார்த்து அதை வீடியோவாகவும் பதிவு செய்தனர். இதை தொடர்ந்து முதலையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதற்காக சென்னையில் இருந்து சிறப்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். முதலையை பிடிக்க பல்வேறு உத்திகளை கையாண்டு முதலை பிடிப்படாமல் இதுவரை போக்கு காட்டியது. இந்த நிலையில் முதலையை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர் இந்தப் பகுதியில் ஆய்வு செய்து முதலையை பிடிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக
பல்வேறு பகுதிகளில் முதலையை பிடிக்க வலைகள் கட்டப்பட்டது.
இந்நிலையில் ஆற்றுப்பாலம் அருகே கட்டப்பட்டிருந்த வலையில் முதலை சிக்கியது. இந்த தகவலை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அந்தப் பகுதியில் கூடி பிடிபட்ட முதலையை பார்த்து செல்கின்றனர்.
ஒரு வருடத்திற்கு மேலாக முதலையை பிடிக்க பல்வேறு யுக்திகளை
கையாண்டும் பிடிபடாது போக்கு காட்டிய முதலை தற்போது பிடிபட்டுள்ளது இந்த பகுதி மக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.
பிடிப்பட்ட முதலையை பாதுகாப்பாக பிடித்து வனத்துறையினர் கொண்டு சென்றனர்.













