மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, மடிப்பிச்சை ஏந்தி, தலையில் துண்டை போட்டு கொண்டு விவசாயிகள் நூதன போராட்டம், கூட்டுறவு விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும், மயிலாடுதுறையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும் நடைபெற்றது :-
தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், சம்பா சாகுபடி தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும், ஏக்கருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரியும், கடந்த குறுவை பருவத்தில் பாதிக்கப்பட்ட பயிறுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகை உடனடியாக வழங்க கோரியும், அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று, தலையில் துண்டை போட்டு கொண்டு மடி பிச்சை ஏந்தி, பிச்சை எடுத்து, நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பைட்:-
ராஜேந்திரன் – விவசாயிகள் சங்க கூட்டமைப்பு







