விவசாயிகளின் பயிர்க்கடனை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!
கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து பாமக – உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பூங்காவூர் ராஜீவ் தலைமை தாங்கினார். இதில், தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடனை எவ்வித நிபந்தனைகளுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், மேட்டூர் அணை திறக்கப்பட்டு பல நாட்களாகியும் கடைமடைப் பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் வந்து சேராததைக் கண்டித்தும், கடந்த ஆண்டு சம்பா நெற்பயிருக்கு பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் ஆலயமணி,மாநில இளைஞர் தலைவர் நரசிம்மன், பாமக மாநில துணை தலைவர் காசிநாதன், மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார், மகளிர் அணி மாவட்ட தலைவர் மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பாக்யராஜ் சதீஷ் மற்றும் இயேசுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி: ஆலயமணி, மாநிலத் தலைவர், தமிழ்நாடு உழவர் பேரியக்கம்.







