சீர்காழி அருகே குமாரநத்தம் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராக வருவதால் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடங்களில் குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்தும் நிலை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சி குமாரநத்தம் கிராமம் உள்ளது இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர் இந்தப் பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இதனிடைய கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் உப்பு நீராக உள்ளதாலும் நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறியதாலும் கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
அன்றாட குடிநீர் தேவைகளுக்கும் சமையல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப்படும் நல்ல குடிநீரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் உள்ள பனமங்கலம், மருவத்தூர் ஆகிய பகுதியில் இருந்து குடங்களில் நாள்தோறும் பிடித்துக் கொண்டு வீட்டில் வைத்து அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் பெண்கள் உள்ளிட்டோர் குடிநீருக்காக சில கிலோமீட்டர் அலைக்கழிக்கப்படும் நிலையால் அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டதோடு இந்த உப்பு நீரை பயன்படுத்தியதால் சிறுநீரகப் பிரச்சனை போன்றவற்றிற்கும் ஆளாகியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகியால் குமாரநத்தம் பகுதிக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நல்ல குடிநீர் வினியோகம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்







