திண்டுக்கல்லில் தமிழ்நாடு பூட்டு சாவி தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம்: நலவாரியத்தில் இணைக்கக் மத்திய, மாநில அரசிற்கு கோரிக்கை
பூட்டு, சாவி தொழிலுக்கு மூலப் பொருட்கள் திண்டுக்கல்லில் கிடைக்கிறது நவீன மூலப் பொருட்கள் மட்டுமே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது – தமிழ்நாடு பூட்டு சாவி தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பேட்டி
திருட்டு போன்ற சம்பவங்களில் தவறு செய்பவர்களுடன் சேர்த்துத் பூட்டு, சாவி தொழிலாளர்களையும் வழக்குகளில் சிக்க வைக்கும் நிலை உள்ளதால், அரசு தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் – தமிழ்நாடு பூட்டு சாவி தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பேட்டி
திண்டுக்கல் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மஹாலில் தமிழ்நாடு பூட்டு சாவி தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதனை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் மற்றும் திண்டுக்கல் தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.
இதுவரை மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக மாநில அளவிலான பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.
பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பூட்டு சாவி தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சையது அஷ்ரப் உசேன் பேசும் போது,
தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாரம்பரியமாக பூட்டு சாவி தொழிலை மட்டுமே நம்பி வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
இத்தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவும், சங்கத்தை அரசின் அமைப்புசாரா நலவாரியத்தில் இணைக்கவும் வலியுறுத்தி திண்டுக்கல் எம்.பி. ஆர். சச்சிதானந்தத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாகவும், சம்பந்தப்பட்ட துறைக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
தொழிலாளர்களின் குடும்பத்தினருக்குக் கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி மற்றும் வயதான தொழிலாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், சாலையோரங்களில் பூட்டு சாவி பழுதுபார்க்கும் கடைகளை நடத்தி வருபவர்களுக்கு, அரசு சார்பில் ஒதுக்கப்படும் கடைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பூட்டு சாவி தொழிலாளர்கள் பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவசரத் தேவைகளுக்குப் பணியாற்றி வரும் நிலையில், தங்களுக்கு 50 சதவீதம் மட்டுமே பாதுகாப்பு உள்ளதாகச் சங்கத்தினர் கவலை தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்களிடம் உரிய அடையாள ஆவணங்களைப் பெற்று வேலை செய்தாலும், திருட்டு போன்ற சம்பவங்களில் தவறு செய்பவர்களுடன் சேர்த்துத் பூட்டு, சாவி தொழிலாளர்களையும் வழக்குகளில் சிக்க வைக்கும் நிலை உள்ளதால், அரசு தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் ‘கே.ஒய்.சி’ (KYC) விவரங்களை முறையாகப் பராமரிப்பதற்காகப் புதிய மொபைல் செயலி (Mobile App) கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. சங்கத்தில் இணையும் உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு, அடையாள அட்டை மற்றும் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ள நிலையில், மேலும் பல விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
ஆட்டோமொபைல் மற்றும் நவீன பூட்டு சாவி தொழில்நுட்பத்தில் ஈடுபடும் இளம் தலைமுறையினருக்குச் சங்கம் சார்பில் இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், பூட்டு சாவி தொழிலுக்கான மூலப்பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே, குறிப்பாக திண்டுக்கல்லில் தயாரிக்கப்படுவதாகவும், நவீன இயந்திரங்கள் மட்டுமே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.







