பேரணாம்பட்டு அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 30,000 பணம் கொள்ளை போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிக்குத்தி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி வயது 65 இவர் வீட்டு வேலை செய்து சிறிது சிறிதாக ரூபாய் 30000 சேர்த்து வைத்துள்ளார் இந்நிலையில் மூதாட்டி கிருஷ்ணவேணி இன்று வழக்கம் போல் வீடு வீடாக சென்று வீட்டு வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக அக்கம் பக்கத்தினர் பேரணாம்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் மூதாட்டி கிருஷ்ணவேணியிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர் விசாரணையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30,000 பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது தெரியவந்ததுவீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.30,000 ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது மேலும் பேரணாம்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கூலி வேலை செய்யும் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 30,000 பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.







