மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்! கர்நாடக முதல்வர் .டி.கே. சிவக்குமார் உருவப்படத்தை எரித்து நாகையில் விவசாயிகள் போராட்டம்; மத்திய மாநில அரசுகள் மௌனம் காத்தால் தமிழக முழுவதும் போராட்டம் வெடிக்கும் விவசாயிகள் எச்சரிக்கை;
பேட்டி: பிரகாஷ் விவசாயி
கர்நாடக மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், பிரதமர் அமர்ந்திருந்த மேடையிலேயே பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மாட்டோம் என்றும் வெளிப்படையாக பேசியது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டித்து, நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின்போது கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் உருவப்படத்தை எரித்து விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க மறுக்கும் கர்நாடக முதலமைச்சரைக் கண்டித்தும், அவரது பேச்சின்போது மௌனம் காத்ததாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் உரிமையைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ச்சியாக மத்திய மாநில அரசுகள் மௌனம் காத்து வந்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி அனைத்து மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்







