குடியாத்தத்தில் பாமகவை சேர்ந்தவர் சுட்டுகொன்ற குற்றவாளி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்ட அழைத்து சென்ற போது – உதவி ஆய்வாளர் ராஜாவை தாக்கிவிட்டு -குற்றவாளி பூவரசன் தப்ப முயற்சி – பூவரசனை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர் – சம்பவ இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் நேரில் ஆய்வு செய்தார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செங்குன்றம் கிராமத்தில் கொலை மற்றும் கொள்ளை கஞ்சா என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பூவரசன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பாமக பிரமுகர் ஞானவேல் என்பவருக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியூரில் இருந்த பாமக பிரமுகர் ஞானவேல் சொந்த ஊருக்கு வந்துள்ளார் அப்போது பூவரசன் என்பவர் தொலைபேசி மூலம் நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்பதற்கு நான் செங்குன்றம் கிராமம் பேருந்து நிலையத்தில் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஞானவேல் அங்கு வந்த பூவரசன் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் ஞானவேல் உயிரிழந்தார் அவருடன் இருந்த ரகு என்பவர் படுகாயம் அடைந்தார்
நேற்று இரவு அவரை பிடித்த காவல்துறையினர் இன்று காலை அவர் கொலைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை எங்கு மறைத்து வைத்துள்ளார் என்பதை காண்பிப்பதற்காக காவல்துறையினர் அவரை கொலை நடந்த சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்
அப்போது உதவி ஆய்வாளர் ராஜா என்பவரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது பூவரசனை வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்
இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் ராஜா மற்றும் குற்றவாளி பூவரசன் இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் நேரில் செங்குன்றத்திற்கு சென்று சம்பவம் நடந்த இடம் மற்றும் துப்பாக்கி எங்கியிருக்கிறது என காவல்துறையுடன் மலைபகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்







