• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூரில் ரயில்வே கேட் மீது டாட்டா ஏசி வாகனம் மோதி விபத்து

by Satheesa
November 8, 2026
in News, News
0
செஞ்சி பேரூராட்சியில் 1கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அறிவுசார் மைய்ய கட்டடம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூரில் ரயில்வே கேட் மீது டாட்டா ஏசி வாகனம் மோதி விபத்து – கேட் இரண்டாக உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு; தனி ஒருவராகப் போராடிய கேட் கீப்பர்!

திருவாரூர்-06

திருவாரூர் அருகே சிங்களாஞ்சேரி கிராமத்தில் ரயில்வே கேட் மீது அதிவேகமாக வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியதில் கேட் இரண்டு துண்டுகளாக உடைந்தது. சம்பவம் நடந்து பல மணி நேரமாகியும் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வராததால், தனி ஒருவராக நின்று போக்குவரத்தையும் பாதுகாப்புப் பணிகளையும் சமாளித்த கேட் கீப்பரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூரில் இருந்து கூத்தாநல்லூர், லட்சுமாங்குடி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையில் சிங்களாஞ்சேரி ரயில்வே கேட் அமைந்துள்ளது.

இந்நிலையில், இன்று ரயில் செல்வதற்காக எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு ரயில்வே கேட் மூடப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவசரமாகத் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற டாட்டா ஏஸ் வாகனம் கேட் மீது மோதியது. இதில் ரயில்வே கேட் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இதையடுத்து வாகனத்தைப் பிடிக்க ரயில்வே ஊழியர்கள் முயன்றபோது, அந்த வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கேட் உடைந்ததால் அதை வழக்கம்போல் மூட முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் ரயிலும் வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து சமயோசிதமாகச் செயல்பட்ட கேட் கீப்பர், சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தி, ரயில் பாதுகாப்பாகச் செல்லும் வரை வாகனங்கள் மற்றும் பொதுமக்களைத் தண்டவாளத்தைக் கடக்க விடாமல் தடுத்து விபத்து ஏற்படாமல் பாதுகாத்தார்.

ரயில் சென்ற பின்னரும் உடைந்த கேட்டைத் திறந்து மூட முடியாததால், சாலையின் இருபுறங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் பல மணி நேரமாக ரயில்வே காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கேட் கீப்பர் தனி ஒருவராகப் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து போக்குவரத்தைச் சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பின்னர் அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் உடைந்த கேட்டைச் சீரமைக்க முயன்றும் உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. இதையடுத்து தற்காலிக ஏற்பாடாக ரயில்வே கேட்டைத் தூக்கி திறந்து வைத்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

இந்த வழியாக நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் நிலையில், ஒவ்வொரு ரயிலும் கடந்து செல்லும்போதும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தி வாகனங்களைக் கட்டுப்படுத்துவது கேட் கீப்பருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வராத நிலையில், ரயில்வே துறை ஊழியர்களுடன் பொதுமக்களும் இணைந்து போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முக்கியத்துவம் வாய்ந்த பிரதான சாலையில் இத்தகைய விபத்து ஏற்பட்டும், உரிய நேரத்தில் ரயில்வே காவல்துறையினர் வராதது குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

தற்போது ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடைந்த ரயில்வே கேட்டைச் சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து

Next Post

திருவாரூர் மாவட்ட மன்னார்குடி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 150 பவுன் தங்க நகைகள் கொள்ளை

Related Posts

வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி முன்னிட்டு ஆவடி வைஷ்ணவி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLAபேட்டி

November 8, 2026
Next Post
செஞ்சி பேரூராட்சியில் 1கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அறிவுசார் மைய்ய கட்டடம்

திருவாரூர் மாவட்ட மன்னார்குடி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 150 பவுன் தங்க நகைகள் கொள்ளை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

by Satheesa
November 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6