திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் தருமபதி விவகாரம்!
திருமுல்லைவாயில் அய்யா வைகுண்டர் தருமபதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக, மரியாதைக்குரிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து எங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தோம்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களின் வழிபாட்டிலும், ஆன்மிக மற்றும் தர்மப் பணிகளிலும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தருமபதியில், பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி அதே இடத்தில் தொடர்ந்து வழிபட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
மேலும், வருவாய்த்துறை மூலம் முறையான கள ஆய்வு மேற்கொண்டு, ஆவணங்களைப் பரிசீலித்து உரிய தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டோம்.
அய்யா வைகுண்டர் தருமபதியின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாப்பதே எங்களது உறுதியான கோரிக்கை!
அய்யா உண்டு!
தர்மம் வெல்லும்! 🙏
மக்கள் சேவகன் நெல்லை ராஜா







