தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை நகரில் புத்தாடைகள் வாங்க குவிந்த பொதுமக்கள். தரைக் கடைகளில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி:-
தீபாவளி பண்டிகை வரும் ஞாயிறன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் மயிலாடுதுறை கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வண்டிக்கார தெரு, காந்திஜி சாலை, நம்பர் 2 ரோடு, பெரிய கடைவீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. புத்தாடைகள் வாங்க ஜவுளி கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். மேலும் தரைக்கடை வியாபாரிகள் குறைந்த விலையில் புத்தாடைகளை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் தரைக்கடை வியாபாரிகளிடம் துணிகள் வாங்கியதால் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்







