மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம் விதித்தனர்
சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட புதிய ராணுவ சாலையில் இயங்கி வரும் எஸ் எஸ் பக்கெட் பிரியாணி உணவகத்தில் முறையாக கழிவு நீர் சேகரிப்பு தொட்டி இல்லாமல் உணவகம் இயங்கி வந்தது இன்று வழக்கம் போல் உணவகம் திறந்த நிலையில் உணவகத்துக்கு அருகில் செல்லக்கூடிய மழை நீர் கால்வாயில் பல மாதங்களாக கழிவுநீர் மற்றும் வியாபாரம் முடிந்து மீதியாகும் உணவுப் பொருட்களை மழை நீர் கால்வாயில் கொட்டப்பட்டு வந்த நிலையில் இன்று அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீரால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதி அடைந்த நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி மாநகராட்சி சுகாதார நல அலுவலர் மொய்தீன் அவர்கள் தலைமையில் எஸ் எஸ் பக்கெட் பிரியாணி உணவகத்திற்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர் இதற்கு மேல் இது போல் மழை நீர் கால்வாயில் கழிவுகளை கொட்ட கூடாது என்றும் இதே போல் அடுத்த முறைதவறு செய்தால் உங்கள் கடைக்கு அரசு சட்டப்படி சீல் வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்

















