காரைக்காலில் இருந்து மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
மயிலாடுதுறை மதுவிலக்குப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் காவலர்கள் திருக்கடையூர் பகுதியில் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் குவாட்டர் மதுபாட்டில்கள் 192, 110 லிட்டர் பாண்டி சாராயம் ஆகியவை இருப்பது தெரியவந்தது. மதுபாட்டில் கடத்திவந்த சீர்காழி அருகே தாண்டவன்குளத்தை சேர்ந்த ரமேஷ்(30), மணி(27) என்பதும் தெரியவந்தது. அதனையடுத்து போலீஸார் ரமேஷ், மணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலம் மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்

















