தினமும் ஐந்து லிட்டர் எரிபொருளை இலவசமாக வழங்க வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…”
தமிழக அரசின் வெற்றி பயணம் திட்டத்தால் ஆட்டோ தொழில் பாதித்து வருவதாக ஆட்டோ தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஹரிகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
கண்டன ஆர்ப்பாட்டத்தில்.."ஆட்டோ தொழிலாளர் நல வாரியம் மூலமாக தீபாவளி போனஸ் 5000 உடனே வழங்க வேண்டும்... ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும்..
ஆர்டிஓ கட்டண உயர்வு, இன்சூரன்ஸ் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஆட்டோ தொழிலாளர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும்… குறைந்த வட்டியில் ஆட்டோ தொழிலாளிக்கு வங்கி கடன் வழங்க வேண்டும்… ஆட்டோ பர்மீட்டுக்கு ஏற்ப சிஎன்சி கேஸ் நிலையங்களை தொடங்க வேண்டும்…” உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது…
மேலும் தமிழக அரசின் வெற்றி பயணம் திட்டத்தால் ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அதனால் ஆட்டோ தொழிலாளர்களுக்கு தினமும் 5 லிட்டர் எரிபொருளை இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது..
இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
பேட்டி: எம்.கே. என். அனிஃபா,
சி ஐ டி யு மாவட்ட செயலாளர்.
திருவாரூர் மாவட்டம்.














