August 26, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

18 ஆண்டுகளுக்குப் பிறகு கனவு நினைவான நாள் – RCBக்கு முதன்முறை IPL கோப்பை !

by Priscilla
June 4, 2025
in Breaking News, Sports
A A
0
18 ஆண்டுகளுக்குப் பிறகு கனவு நினைவான நாள் – RCBக்கு முதன்முறை IPL கோப்பை !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

அகமதாபாத் : எத்தனை விமர்சனங்கள்… எத்தனை கிண்டல்கள்… எத்தனை கேளிகள்…! 18 ஆண்டுகளாக சுமந்த வலிக்கும், வேதனைக்கும் விடைகொடுத்தது 2025 IPL இறுதிப் போட்டி. பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த முக்கியமான நாளில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறங்கியது. அவர்களது எதிரணியானது, கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் ஆசையில் களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி.

பேட்டிங்கில் RCB

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் பீல்டிங் தேர்வு செய்தார். RCBக்கு தொடக்கம் ஆச்சரியமாக இருந்தது – பிலிப் சால்ட் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஒவ்வொரு வீரரும் 20-30 ரன்கள் எடுத்தே அவுட் ஆனனர். விராட் கோலி இன்று ஆங்கர் இனிங்ஸாக விளையாடி, 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மட்டுமே இருந்தன.

மயங்க் அகர்வால் (24), பட்டிதார் (26), ஜிதேஷ் சர்மா (24), ரொமாரியோ ஷெப்பர்ட் (17) என எல்லோருமே சிறு பங்களிப்புகள் அளித்தனர். கடைசி ஓவரை அர்ஸ்தீப் சிங் சுழற்றியதில் வெறும் 3 ரன்கள் மட்டும் விட்டார் மற்றும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவ்வாறாக RCB 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் பதிலடி – ஒட்டுமொத்தமாக தடுமாறிய முதல்நிலை

191 ரன்கள் என்ற இலக்குடன் பிரப்சிம்ரன் மற்றும் பிரியான்ஸ் தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. ஆனால் இருவரும் முறையே 26 மற்றும் 24 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 1 ரன்னில் அவுட் ஆனதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜோஸ் இங்கிலிஷ் 39 ரன்கள் எடுத்தபோதும் மற்றவர்கள் தொடர முடியவில்லை. ஷஷங்ச் சிங் மட்டும் தொடர்ந்தார். கடைசி 4 ஓவர்களில் 55 ரன்கள் தேவைப்பட்டபோதும், புவனேஸ்வர் குமார் மற்றும் யஷ் தயாள் சிறப்பாக பந்துவீசி பஞ்சாப் அணியின் வேகம் குறைத்தனர்.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டபோது, ஹசல்வுட் முதல் இரண்டு பந்துகளில் ரன் விடாமல் அழுத்தம் ஏற்படுத்தினார். ஷஷாங் சிங் கடைசி நான்கு பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்தபோதும், வெற்றி கிடைக்கவில்லை. 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது RCB!

கண்ணீர் மல்கிய கோலி

வெற்றியை உறுதி செய்த பிறகு விராட் கோலி மண்டியிட்டு கண்கலங்கினார். IPL தொடங்கிய 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரே அணியில் தொடர்ந்தவர். “அவனை தவிர மற்றவர்கள் கோப்பை வென்றுவிட்டார்கள்” என்ற விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். 18 வருடங்களாக எதிர்பார்த்த கோப்பை, இறுதியில் கைப்பற்றியதை உணர்ந்த அவர் கண்ணீர் மல்கினார்.

Tags: ipl finalipl2025RCBvirat kolhi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நிவாரண முகாமை நோக்கி வந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு – பலர் உயிரிழப்பு !

Next Post

மனுஷி : “ஆட்சேபனைக்குரிய காட்சிகளை தெரிவிக்காவிட்டால் எடிட் எப்படி செய்ய முடியும் ?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Related Posts

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்
News

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி
News

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
தென்னிந்திய அளவிலான கராத்தே சிலம்பம் யோகாபோட்டிகள்

August 11, 2026
Next Post
மனுஷி : “ஆட்சேபனைக்குரிய காட்சிகளை தெரிவிக்காவிட்டால் எடிட் எப்படி செய்ய முடியும் ?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மனுஷி : “ஆட்சேபனைக்குரிய காட்சிகளை தெரிவிக்காவிட்டால் எடிட் எப்படி செய்ய முடியும் ?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
புழல் நாகப்பா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் குப்பை கழிவுகளால் நோய் தொற்று அபாயம்

நாகை ரேஷன் கடையில் திடீர் ரெய்டு, மக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை

August 25, 2026

திருக்கடையூர் கோவிலில் நடிகை நளினி சஷ்டியப்த பூர்த்தி சிறப்பு வழிபாடு செய்தார்

திருக்கடையூர் கோவிலில் மேளம் வாசித்த டிரம்ஸ் மணி வியந்து பார்த்த பக்தர்கள்

மயிலாடுதுறையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் குடிநீரில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து மக்கள் சாலை மறியல்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.