மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் கொள்முதல் செய்த 15,000 மெட்ரிக் டன் நெல் உள்பட 70,000 மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இளம்பரிதி மாவட்டத்தில் கொள்ளுங்கள் செய்யப்பட்ட 70 ஆயிரம் நெல் மூட்டைகளை எப்பொழுது அரவைக்கு அனுப்புவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்சி பேசிய விவசாயி கூறுகையில்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இயக்கம் செய்யப்படாமல் இருந்த 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே அரவைக்காக இயக்கம் செய்யப்பட்டது. எஞ்சிய 15 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடைபெற்ற குறுவை பருவ நெல் கொள்முதலில் 55 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதில் பாதி நெல் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் 3000 முதல் 5000 நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மொத்தமாக சுமார் 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் அரவைக்கு இயக்கம் செய்யப்படாமல் கிடங்குகளிலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் தேக்கமடைந்துள்ளன. நாள்பட்ட நெல் மூட்டைகளை அறவை செய்து பொதுமக்களுக்கு வழங்கும்போது அரிசியில் நாற்றம் அடிப்பதாகவும் குற்றம் சாட்டினார். பின்னர் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு அதிகாரிகள் கொள்முதல் செய்த நெல்லை அரவைக்கு அனுப்பாமல் தேக்கம் அடையச் செய்திருப்பதாக குற்றச்சாட்டினார். அந்த நெல்லை உடனடியாக அரவைக்கு இயக்கம் செய்து நுகர்வோருக்கு தரமான அரிசியை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
பேட்டி: இளம்பரிதி (விவசாயி).













