திருவாரூர் ஆயுதப்படை அலுவலகத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிப்பு – 21 காவலர்கள் மூன்று முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வீர வணக்கம் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை.
திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. கடந்த 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21-நாள் இதேநாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் பத்து மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.
கடல் மட்டத்திலிருந்து 16000 அடி உயரத்தில் அன்று வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி, காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் நினைவு ஸ்தூபிக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து. 21 காவலர்கள் வானை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு வீரவணக்கம் செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காவலர்கள் ஓய்வு பெற்ற காவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

















