சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தை
இரண்டு நாட்களில் நிரந்தர தீர்வு எட்டப்படாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மீனவர்கள் எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமத்தில் ஐந்தாயிரம் குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இங்கு 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 500-க்கும் மேற்பட்ட பைபர் படங்களும் மீன்பிடி தொழில் ஈடுபடுத்தி வருகின்றன இதற்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் டீசல் விற்பனை நிலையம் இங்கு இயங்கி வருகிறது.இந்த டீசல் விற்பனை நிலையத்தில் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 153 விற்பனை செய்யப்படுகிறது இதனால் மீனவர்கள் டீசலை பெற முடியாத சூழ்நிலை இருப்பதால் வாழ்வாதாரம் தங்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதால் மானிய டீசல் விலை ரூபாய் 88 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழைய துறைமுகத்தில் நிரந்தரமாக டீசல் பங்க் அமைத்து தரக்கோரி காலவரையற்ற வேலை வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.இதனை எடுத்து பழையார் மீனவர்களிடையே மீனவளத்துறை உதவி இயக்குனர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக பங்கு அமைத்து தருவதாகவும் இரண்டு மாதங்களில் நிரந்தரமாக பங்கு அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். டீசல் விநியோகம் தொடங்கும் வரை போராட்டம் தொடர என மீனவர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இரண்டு நாட்களில் நிரந்தர தீர்வு எட்டப்படாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போடுவதாக மீனவ மீனவர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக மானிய டீசல் பங்கை பழையார் பகுதியில் திறந்து தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தியுள்ளனர்.
பேட்டி : பொன்னியின் செல்வன். பழையார் மீனவர்















