இடைத்தேர்தலில் தவெக வெற்றியை முன்னிட்டு விழுப்புரத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
விழுப்புரம்:
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நோக்கி முன்னேறி வருவதாகக் கூறி, விழுப்புரத்தில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ள தவெக அலுவலகம் முன்பு உள்ள சாலையில், மாநில துணைப் பொதுச் செயலாளர் தொள்ளாமூர் கண்ணன் மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் குஷி மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் கட்சித் தொண்டர்கள் திரண்டனர். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் திருச்சி சாலையில் தவெக அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தக் கொண்டாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.உடன் பொய்கை பாஸ்கர் கில்லி சுகர்ணாநூற்றுக்கு மேற்பட்ட தமிழக வெற்றி கழகம் தொண்டர்கள் நூற்றுக்கு மேற்பட்ட இருந்தனர்















