வேதராண்யத்தில் அறுசுவை உணவோடு நடைப்பெற்ற சமுதாய வளைகாப்பு விழா; சந்தோசத்தில் பூரித்த கர்ப்பிணி பெண்கள்
வேதாரண்யத்தில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 120 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தனியார் திருமண அரங்கில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வேதாரண்யம் ஒன்றியத்துக்குட்பட்ட 120 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. கர்ப்பிணி பெண்களுக்கு மலர் மாலையிட்டு, சந்தனம் பூசி, கண்ணாடி வளையல் அணிவித்து, புடவை மற்றும் மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்து, முஸ்லீம், கிருஷ்தவ கர்ப்பிணி பெண்கள் என அனைத்து சமூகத்தினர் உறவுகளோடு ஒரே இடத்தில் வைத்து வளைகாப்பு நடத்தியது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், பூரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இவ் விழாவில் சமூக நலத்துறை அலுவலர்கள், தமிழக வெற்றிகழக ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் .















