திண்டுக்கல் நத்தம்ரோடு, நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை சம்பவ இடத்தில் சாணார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக பிரமுகர் பாத்ரூம் முருகன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வீரபத்திரன் என்பவர் வெட்டி படுகொலை.
திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான ‘பாத்ரூம்’ முருகன் கடந்த ஜூலை 2025-ல் காரில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கொலைச் சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (எ) ‘பாத்ரூம்’ முருகன். இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராகவும், திமுக பிரமுகராகவும் இருந்தார். ஊரில் உள்ள கட்டணக் கழிப்பறைகளை ஏலம் எடுத்து நடத்தியதால் இவருக்கு ‘பாத்ரூம் முருகன்’ என்ற பெயர் வந்தது.
- கடத்தல்: ஜூலை 23, 2025 அன்று வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த முருகனை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது. கொலை: காவல்துறை துரத்துவதை அறிந்த அக்கும்பல், ஓடும் காரிலேயே முருகனை வெட்டிக் கொலை செய்தது. காரணமும் கைது நடவடிக்கையும் மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் வரவு-செலவு கணக்கு பார்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் தகராறு காரணமாக இப்படுகொலை நடந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக முருகனின் கார் ஓட்டுநர் ஷேக் பரீத் உள்பட 8 பேரை கோபால்பட்டி மற்றும் நத்தம் பகுதியில் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் தற்போது வெளியில் உள்ள நிலையில் இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான வீரபத்திரன் என்பவர் திண்டுக்கல் நத்தம் ரோடு நொச்சி ஓடைப்பட்டி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் கொலை குற்றவாளிகளை தேடி வரும் நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் ஆயுதங்களை தற்போது கைப்பற்றியுள்ளனர்.திமுக பிரமுகர் பாத்ரூம் முருகன் கொலை செய்யப்பட்டதால் பழிக்கு பழிவாங்கப்பட்டதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















