மதுராந்தகம் இடைத்தேர்தல் இன்று ஒரே நாளில் முன்னாள் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின். மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் ரோடு ஷோ பொதுக்கூட்டம்.
திமுக பிரச்சாரம்: திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமன் அவர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்
நேற்றைய தினம் தாராபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அங்கு அவர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து இன்று மதுராந்தகம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதேபோன்று அதிமுக வேட்பா கணிதாசம்பத்தை ஆதரித்து இன்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சென்று ரோடு ஷோ செய்கிறார்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பொறுத்தவரை பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஒரே நாளில் மதுராந்தகத்தில் நேரடியாக களமிறங்குவதால், அப்பகுதியில் தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது.
நேற்றைய தினம் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து தமிழக முதலமைச்சர் சி ஜோசப் விஜய் மதுராந்தகம் தொகுதியில் அவர் ரோடு ஷோ நடத்தினார்
இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக திமுக இரு கட்சிகளும் சேர்ந்த தலைவர்கள் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ செய்ய எடுப்பதால் அதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகின்றன தேர்தல் இன்னும் மூன்று நாள் உள்ள நிலையில் விறுவிறுப்பாக சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.














