மயிலாடுதுறை அருகே மின் கம்பத்தில் வேன் மோதி விபத்து. டிரைவர் கண் அயர்ந்ததால் மின்கம்பம் கோயில் கொட்டகையில் வேன் மோதியதில் வேனில் பயணித்த 12 பேர் காயம். குத்தாலம் போலீசார் விசாரணை:-
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சேலத்தில் இருந்து 22 பேர் கொண்ட குழுவினர் மகேந்திரா வேன் ஒன்றில் இன்று வந்துள்ளனர். வழியில் அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் வேன் வந்தபோது வேன் டிரைவர் சேலம், வலை கொம்பை பகுதியை சேர்ந்த சத்ரியன்.32. தூக்க கலக்கத்தில் வேனை ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதி அருகே இருந்த ஜீவ சமாதி அடைந்த உறிகட்டி சுவாமிகள் கோயில் கொட்டகையில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் டிரைவர் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சரண்யா.34, ஜனார்த்தனன்.13, விஜயலட்சுமி.60, ஞானம்.70, கதிர்வேல்.28, சித்ரா.24, திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி.66, சந்திரசேகர்.74. உள்ளிட்ட 12 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்தனர். டிரைவர் சத்ரியன் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.














