காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆக்கூரில் இலட்சிய ஜனநாயக கட்சி சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று காந்தி ஜெயந்தி விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு இலட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு இலட்சிய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் செங்குட்டவன் தலைமை வகித்தார். தொடர்ந்து காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு காந்தியடிகளின் கொள்கைகளான அகிம்சை, உண்மை, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை கடைப்பிடித்து செயல்பட வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றனர்.














