பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு முன்பு திருமணம் செய்யக்கூடாது, மன்னம்பந்தல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விழிப்புணர்வு தீர்மானம் இயற்றிய பெண்கள், பொதுமக்கள் வரவேற்பு :-
மயிலாடுதுறை மாவட்டத்தில், காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் இன்று 241 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. கிராமத்தின் வரவு செலவு கணக்குகள் கிராம ஊராட்சி செயலாளர்கள் மூலம் வாசிக்கப்பட்ட நிலையில், சாலை வசதி குடிநீர் வசதி தெருவிளக்கு வசதி உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் சிறப்பு தீர்மானங்கள் கொண்டு வந்தனர். மன்னம்பந்தல் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம், ஊராட்சி செயலாளர் ரஜினி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவ்வை மகளிர் சுய உதவிக்குழு சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தீர்மானம் இயற்றப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு 18 வயது ஆகும் வரை திருமணம் செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும் என்று சிறப்பு தீர்மானம் இயற்றப்பட்டது. பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.














