குமரி மாவட்ட பேரூராட்சிகளில் அடிப்படை வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாக கூறி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
குமரி மாவட்டத்தில் பல்வேறு பேரூராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும் புதிய மின்கம்பம் அமைத்து எல்.இ.டி. விளக்கு பொறுத்தும்படி பல முறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் சென்னையில் இயக்குனர் அலுவலத்தில் மனு கொடுத்ததாகவும் மேலும் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் சென்னையில் இயக்குனர் அலுவலத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த ஒரு அனுமதியையும் தரவில்லை. எனவே பேரூராட்சிகளுக்கு சிறப்பு நிதியிலோ அல்லது பேரூராட்சி பொது நிதியிலோ பணி செய்ய ஆணை வழங்க வேண்டும். மேலும் அனைத்து பேரூராட்சிகளிலும் நிரந்தர செயல் அலுவலர் இல்லை. இதனால் பேரூராட்சிகளில் வளர்ச்சி பணிகள் ஏதும் நடைபெறவில்லை. எனவே செயல் அலுவலர் நியமனம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர்.














