திருவாரூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அரசு அனைத்து துறை ஓய்வுதியர் சங்கத்தினர் 24மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்*
ஓய்வூதிர்களை பாதிக்கும் வேலிடேசன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,கமுட்டேஷன் பிடித்தம் செய்யும் காலத்தை 10 ஆண்டுகள் 8 மாதங்களாக குறைத்திட வேண்டும், 70வயது நிரம்பிய ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி 150க்கும் மேற்பட்ட ஒய்வூதியர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.














