மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நாட்களில் வறண்ட காவிரி ஆறு, பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க கோரியும் விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, காவிரி ஆற்றின் உள்ளே இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-
கடந்த ஒன்றாம் தேதி மேட்டூர் அணை டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக திறக்கப்பட்டது. 45 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு காவிரி நீர் வந்தடைந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் காவிரி ஆற்றில் தண்ணீர் சென்ற நிலையில், அதன் பிறகு நீர் வரத்து குறைந்து தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆறு வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக சம்பா சாகுபடி கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மேற்கு புறம் உள்ள மாவட்டங்களில் தண்ணீர் அதிக அளவு எடுக்கப்படுவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆறு வரண்டு உள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், போதிய தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை நகரின் எல்லை பகுதியான கிட்டப்பா பாலம் அருகில் காவிரி ஆற்றின் உள்ளே இறங்கி கண்களில் கருப்பு துணியை கட்டிய படி விவசாயிகள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். போதிய தண்ணீர் திறக்காவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பைட்:-
ராமலிங்கம் இயற்கை விவசாயி













