நீடூர் ஊராட்சியில் சபீநகர் மற்றும் கீழத்தெருவில் வசித்து வரும் மக்களுக்கு சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நீடூர் ஊராட்சி சபிர் நகர் மற்றும் கீழத்தெரு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் இடுப்பு அளவு தண்ணீர் நிரம்பி நிற்பதால் குழந்தைகள் பெரியவர்கள் வரை பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு வெளியில் சென்று வர முடியாமல் இருந்து வருகின்றனர் மண் சாலை சேரும் சகதியுமாக உள்ளது இந்த சாலையை பயன்படுத்திதான் கீழ தெரு பட்டியல் இன மக்கள் சென்று வருகின்றனர் மழைக்காலங்களில் பக்கத்தில் உள்ள ரயில்வே ட்ராக் வழியாக அப்குதி மக்கள் சென்று வருவதால் விபத்து ஏற்படுமோ என்ற அபாய பயத்தில் உள்ளனர் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை போட்டதாகவும் மீண்டும் போடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை அப்பகுதியில் பயன்பாட்டுக்குட்பட்ட சாலை மண்சாலையாகவே உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தார் சாலை அமைத்து தர கோரி அப்பகுதி மண் சாலையில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பேட்டி :-
நசிமா பானு
.













