சீர்காழி அருகே குளத்தில் புகுந்து அச்சுறுத்தி வந்த முதலை கிராம மக்கள் அச்சம்.
முதலையை மீட்டு அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்ட வனத்துறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் இருந்து முதலை ஒன்று கிராம குளத்தில் புகுந்து விட்டதால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து சீர்காழி வனத்துறையினருக்கு கிராமமக்கள் தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சீர்காழி வனசரக அலுவலர் தலைமையில் வனப்பணியாளர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் கொண்ட குழு நேரில் சென்று 7 அடி நீளம் கொண்ட 100 கிலோ எடையுடைய பெண் முதலையை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட முதலையை பாதுகாப்பன முறையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்













