தமிழ்நாட்டில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ள நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் முடித்ததும் லண்டனுக்கு தேனிலவுக்கு போயிருக்கிறார் முதலமைச்சர் விஜய்:- மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் விமர்சனம்:-
மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் கலந்துகொண்டு பேசுகையில், முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் மிகவும் மோசமான படம். அந்த படத்திற்கு தடை விதித்ததால் தான் ஏதோ பெரிய விஷயம் இருப்பதாக மக்கள் தவறாக எண்ணி விட்டார்கள். கடந்த தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து விஜய் மக்களை ஏமாற்றினார். ஆனால் மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். ரீல்ஸ் மற்றும் விளம்பரங்களுக்காக பட்டு வேட்டி, சட்டை அணிந்து கொண்டு வீடுகளுக்கு சென்று நலம் விசாரிப்பது போலவும், புடவை எடுத்துக் கொடுப்பது போலவும் செட்டிங் செய்து நடிக்கிறார். தற்போது சட்டமன்றம் சந்தைக்கடையை விட கேவலமாக சீரழிந்து விட்டது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மாமா மச்சான் என ஒருமையில் பேசுகின்றனர். முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் துண்டு சீட்டு இல்லாமல் சட்டமன்றத்தில் வெளியிலோ பேச முடிவதில்லை. மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ள நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் முடித்ததும் முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு தேனிலவுக்கு போயிருக்கிறார். விஜய் திரிஷா குறித்து ஒருமையில் பேசிய செல்வி ராமஜெயம், திரிஷா லண்டனுக்கு சென்றது குறித்து பத்திரிக்கையில் செய்தி வெளிவராத நிலையில் கடைசி நேரத்தில் நடிகை திரிஷா லண்டனில் இருப்பது தெரிய வந்தது. நாட்டின் முதல் குடிமகன் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். இதையெல்லாம் பார்க்க வேண்டும் என்பது எங்கள் தலையெழுத்து. தொட்டால் விடமாட்டேன் என்று கூறும் முதலமைச்சர் விஜய் ஆட்சியில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதிமுகவில் பதவிகளை அனுபவித்துவிட்டு தற்போது தவெகவுக்கு சென்;றுள்ள மரகதம், குமரவேல் போன்றவர்கள் துரோகிகள் என்றும் அவர்களை மக்கள் தொகுதிக்குள் நுழையவிடாமல் விரட்டியடிப்பார்கள் என்றார்.













