அண்ணா 118-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .செலுத்தினார் விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன்
விழுப்புரம்:
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து மத்திய மாவட்ட செயலாளர் டாக்டர் லட்சுமணன் தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, விழுப்புரம் திருச்சி சாலை வழியாக கலைஞர் அறிவாலயத்தை சென்றடைந்தனர். தொடர்ந்து, கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு டாக்டர் லட்சுமணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பிறகு அன்னதானம் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.













