மேட்டூரில் காவிரி நீர் திறந்து விடப்பட்டதால் மயிலாடுதுறையில் திடீர் இடியுடன் கூடிய கனமழை. விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி..
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். தொடக்கத்தில் விநாடிக்கு 3,000 கனஅடி திறக்கப்பட்டு பின்னர் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை நேற்று வந்தடைந்தது. சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி காவிரி அன்னையை வரவேற்று நொடிக்கு 803 கன அடி தண்ணீரை நீர்வள ஆதாரத்துறையினர் திறந்து விட்டனர். காவிரியில் தண்ணீர் செல்வதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் அதிகமாக இருந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடிரென இடியுடன் கூடிய பலத்த கன மழை இடை விடாது பெய்து வருகிறது.மயிலாடுதுறை, குற்றாலம், மணல்மேடு, சீர்காழி,மேலச்சாலை, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார்,தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகி.வெயில் கடுமையாக இருந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் சம்பா நேரடி விதைப்பு செய்துள்ள விவசாயிகள் ஏற்ற மழையாகவும் கருதப்படுகிறது. மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

















