முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், சிலம்பம் விளையாடிய போட்டியை துவக்கி வைத்த பொழுது, எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்த மயிலாடுதுறை நாடாளுமன்ற எம்பி சுதா, விழுந்தாலும் மீண்டும் எழுந்து போட்டியை விளையாட ஆர்வம் வேண்டும் என்று விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில், மயிலாடுதுறை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக் காண விளையாட்டுப் போட்டிகள் இன்று துவங்கின. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஆர் சுதா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். சிலம்பம் போட்டிகளுக்கான துவக்க நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களிடமிருந்து சிலம்பத்தை வாங்கிய செல்வி சுதா, சிலம்பம் சுழற்றியபடி போட்டியாளர்களை எதிர்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக தலை குப்புற கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் பதறி அடித்தபடி நாடாளுமன்ற உறுப்பினரை தூக்கி நிறுத்தினர். தனக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, தொடர்ந்து சிலம்பத்தை சுற்றி காண்பித்தார். இதனை அடுத்து விழா மேடையில் பேசிய அவர், விளையாடும் பொழுது தான் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததாகவும், அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் எழுந்து விளையாடினேன், இதுபோல் மாணவ மாணவிகள், விழுந்தாலும் எழுந்து நின்று முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனுஸ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்…













