மயிலாடுதுறை காவிரிக்கரையில் அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ சின்னமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம், திரளான பக்தர்கள் பங்கேற்பு :-
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த
ஸ்ரீ பிரசன்ன சின்ன மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது, இந்த ஆலயம் பொதுமக்கள் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு, ஆலயத்தில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது நான்காவது கால யாகசாலை பூஜை நிறைவடைந்த நிலையில் யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

















