விழுப்புரத்தில் விஸ்வகர்ம பொன், வெள்ளி ஆபரண தொழிலாளர் சங்கம், எம்.கே., தியாகராஜ பாகவதர் விஸ்வகர்ம நற்பணி மன்றம் சார்பில், விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த நீட் தேர்வு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து மடல் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் ஆதவன் முத்து தலைமை தாங்கினார். எம்.கே.டி., மன்ற தலைவர் சேகர் வரவேற்றார். செயலாளர்கள் வெங்கடேசன், வீரமணி, பொருளாளர்கள் ரமேஷ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பாண்டுரங்கன், செயலாளர் சுசில்குமார், குழு தலைவர் இஷ்டலிங்கம் ஆகியோர், நீட் தேர்வு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் 80 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து மடல் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கினர். இதில், நிர்வாகிகள் உமாபதி, சிவசங்கர், வீரமணி, ரவிக்குமார், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் வீரமணி சித்திரவேல் நன்றி கூறினார்.

















